உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 28, 2019

உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

மதுரையில் பாடவேளை ஒதுக்கீடு நிர்ணயம் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' (உபரி) எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான பாடவேளை ஒதுக்கீடு மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் தொடர்பாக ஆய்வு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.



டி.இ.ஓ.,க்கள் முத்தையா, வளர்மதி, இந்திராணி, மீனாம்பாள் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.


அரசு உத்தரவுப்படி தற்போது ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு வாரம் 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். கிராம பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார்.அதற்கேற்ப பாடவேளைகள் உள்ளன.


தற்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையில் உள்ள இரு வகுப்பு பிரிவுகளையும் ஒரே வகுப்பாக்கி பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.



இதனால் அவர்களின் பாடவேளையும் குறையும். அதை ஈடுகட்ட அவர்களுக்கு கீழ் நிலையில் உள்ள 9,10ம் வகுப்பிற்கு பாடம் நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வகுப்புகளின் பட்டதாரி ஆசிரியர்கள் 350 பேர் வரை உபரியாக (சர்பிளஸ்) உள்ளனர்.



முதுநிலை ஆசிரியர்களின் வருகையால் உபரி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில் "பாடவேளை, பணிநிர்ணயம் குறித்து தகவல் சேகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

No comments:

Post a Comment