வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு முக்கிய வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 14, 2019

வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு முக்கிய வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு இருந்தால், அதை நீக்க, வாக்காளர்கள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி, செப்டம்பர், 1ல் துவக்கப்பட்டது;


 நவம்பர், 18 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியை கண்காணிக்க, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பின், அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி, செப்டம்பர், 1ல் துவக்கப்பட்டது. மொத்தம் உள்ள, 5.99 கோடி வாக்காளர்களில், தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என, இதுவரை, 1.64 கோடி பேர் சரி பார்த்துள்ளனர்; மீதமுள்ளோரும் சரி பார்க்க வேண்டும். அதற்காகவே, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு திட்டம், நவம்பர், 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 25ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


அதன் பின், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை சரி பார்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 20ல் வெளியிடப்படும். இப்பணி எவ்வாறு நடக்கிறது என, கண்காணிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 10 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும், மூன்று மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும், தங்களுடைய பெயர், முகவரி, புகைப்படம் சரியாக உள்ளதா என, பார்த்துக் கொள்ள வேண்டும்;

 மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகளை, அதிக அளவில் நீக்கி உள்ளோம். பொதுமக்கள் இரட்டை பதிவு இருந்தால், தாமாக முன்வந்து, அதை நீக்க விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பது பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.

No comments:

Post a Comment