2029 காலியிடங்களுக்கு ரயில்வேயில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 17, 2019

2029 காலியிடங்களுக்கு ரயில்வேயில் வேலை


இந்திய அரசின் வடமேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 2029 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentices

மொத்த காலியிடங்கள்: 2029


வயதுவரம்பு: 08.12.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஐடிஐ தொழிற்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: www.rrcjaipur.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcjaipur.in அல்லது http://www.rrcjaipur.in/Upload/News-Events/Act%20app%202019-20.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2019


Click here download more details

No comments:

Post a Comment