இந்த வருடத்தில் இதுவரை கனமழை பெய்யாத இந்த ஒரு மாவட்டத்தில் நவம்பர் 28,29 ல் கனமழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 25, 2019

இந்த வருடத்தில் இதுவரை கனமழை பெய்யாத இந்த ஒரு மாவட்டத்தில் நவம்பர் 28,29 ல் கனமழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வெப்பச் சலனத்தால் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.குமரி கடல் பகுதியில் 2 நாட்களுக்கு சூறைச் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இரு நாட்களுக்கு இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.


சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28, 29ம் தேதிகளில் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 34 செ.மீ.க்கு பதில் 30 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது.

சென்னையில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய மழையான 30 செ.மீ.க்கு பதில் 8 செ.மீ. மழையே பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment