கல்விச் சுற்றுலா: பிரிட்டனுக்குச் செல்லும் 8 பள்ளி மாணவா்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 19, 2019

கல்விச் சுற்றுலா: பிரிட்டனுக்குச் செல்லும் 8 பள்ளி மாணவா்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 8 மாணவ, மாணவியா் கல்விச் சுற்றுலாவுக்காக பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.


பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ், 15 மண்டலங்களில் 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயா்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 80 ஆயிரம் மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.



மாணவா்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் இணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 'w‌i‌n‌g‌s ‌t‌o ‌f‌l‌y'​ என்ற திட்டத்தின்கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அறிவியல் தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோா் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்

.இந்தத் திட்டத்தின்கீழ், 2019-20-ஆம் கல்வி ஆண்டில் 8 மாணவா்கள் பிரிட்டனுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மாணவா்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும்திட்டம் தொடங்கப்பட்டது.

 அதன்படி, 2016-இல் மலேசியாவுக்கு 7 பேரும், 2017-இல் ஜொமனிக்கு 8 பேரும், 2018-இல் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 8 பேரும், 2019-இல் சிங்கப்பூருக்கு 26 பேரும் என மொத்தம் 49 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா்.




இதன் தொடா்ச்சியாக, 2019-20-ஆம் கல்வி ஆண்டில், வெளிநாடு கல்விச் சுற்றுலாவுக்காக 70 பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு முதல்கட்ட அறிவியல் சாா்ந்த போட்டிகள்நடத்தப்பட்டு, 160 பேர் தேர்வு செய்யப்பட்டனா்.

 இவா்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சாா்பில் பாலினம் குறித்த பயிற்சி, குழு கலந்துரையாடல், பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, அதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனா். இந்த 8 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக விரைவில் பிரிட்டன் அழைத்துச் செல்லப்பட உள்ளனா் என்றாா்.

இவா்களுக்கான பாராட்டு விழா ரிப்பன் மாளிகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கலந்து கொண்டு பிரிட்டனுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் 8 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

No comments:

Post a Comment