8ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் அமைக்க ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 23, 2019

8ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் அமைக்க ஆய்வு

ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைக்க, ஆய்வு பணி நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலபாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், ஐந்து, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


 ஒரு கிலோ மீட்டருக்குள் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மூன்று கிலோ மீட்டருக்குள் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், தேர்வு மையம் அமைக்க வேண்டும்.

ஆய்வு பணி துவக்க, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

.கோவை

 மாவட்டத்தில், 15 ஒன்றியங்களிலும், வட்டார கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில், ஆசிரியர் பயிற்றுனர்களால், பொதுத்தேர்வு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் குறித்த பட்டியல் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அருகாமை பள்ளிகளின் பட்டியல் பெறப்படுகிறது' என்றனர்.

No comments:

Post a Comment