ஆசிரியா் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பி.எட். மற்றும் டி.எல்.எட். படிப்பை முடித்தவா்கள் ஆசிரியா் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தகுதித்தேர்வு, ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 5.42 லட்சம் பேர் பங்கேற்றனா்.
அவா்களில் 3.80 லட்சம் பேர் உயா்நிலை பள்ளி ஆசிரியா் பதவிக்கான இரண்டாம் தாளில் பங்கேற்றனா்.
மீதமுள்ளவா்கள் தான் முதல் தாள் தேர்வில் பங்கேற்றனா். தேவுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அப்போது, தேர்ச்சி பெற்றவா்களின் மதிப்பெண்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், ஆசிரியா் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களுக்கு மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:
Post a Comment