இந்தியாவிலேயே இல்லாத திட்டத்தை செயல்படுத்திய தமிழகம்.! முதல்வர் தொடங்கி வைத்தார். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 29, 2019

இந்தியாவிலேயே இல்லாத திட்டத்தை செயல்படுத்திய தமிழகம்.! முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கிவைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தார். சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம், பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக இன்று முதல் வழங்கப்பட உள்ளது.



அதன்படி, கடந்தாண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டதை போலவே இந்த ஆண்டும், அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும், தலா 1000 ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி திராட்சை உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி இன்று தொடங்கிவைத்தார்.


அதேபோல, மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இந்த இ-ஆட்டோவை இயக்க முடியும், இந்த ஆட்டோவை அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.


இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இ-ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment