மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கவும் தவறான முடிவு எடுப்பதை தடுக்கவும் கவுன்சிலிங் கொடுக்க ஆசிரியர்கள் முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 13, 2019

மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கவும் தவறான முடிவு எடுப்பதை தடுக்கவும் கவுன்சிலிங் கொடுக்க ஆசிரியர்கள் முடிவு


தேர்வு எழுதாமல் இருப்பதற்காக 4 மாணவர்கள் தங்களது கையை முறித்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்புக்கு தேர்வு நடந்து வருகிறது. நேற்று பள்ளிக்கு வந்த 4 மாணவர்கள் கையில் கட்டுடன் வந்தனர்.

 இதுகுறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது, ஒருவர் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும், ஒரு மாணவன் விளையாடும்போது கை முறிந்ததாகவும், மற்றவர்கள் பஸ்சில் இருந்து விழுந்ததில் கை முறிந்ததாகவும் கூறினர். ஒரே நேரத்தில் 4 பேருக்கு கை முறிந்தது ஆசிரியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

இதில் தேர்வு எழுதாமல் இருப்பதற்காக தாங்களே தங்கள் கையை முறித்துக்ெகாண்டதாக கூறினர். கையை முறிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வதற்காக கூகுளில் வீடியோக்கள் பார்த்துள்ளனர்


. அதில் கிடைத்த ஆலோசனைபடி 4 மாணவர்களும் தாங்களே தங்கள் கையை முறித்துள்ளனர். இதை கேட்டு ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், கையை முறித்துக்கொண்ட மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கவும் தவறான முடிவு எடுப்பதை தடுக்கவும் கவுன்சிலிங் கொடுக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment