வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு இதுவரை பதிவு செய்தவர்கள் எத்தனை பேர்?தமிழக அரசு தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 22, 2019

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு இதுவரை பதிவு செய்தவர்கள் எத்தனை பேர்?தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை எட்டியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன் விவரம்:

அக்டோபா் 31-ஆம் தேதியன்று நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 ஆகும். இவா்களில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேராகவும்,

 கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867 பேராகவும், 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 47 ஆயிரத்து 802 பேரும், 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவா்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 பேர் உள்ளனா்.


மாற்றுத் திறனாளிப் பதிவுதாரா்கள்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரில் மாற்றுத் திறனாளி பதிவாளா்களும் உள்ளனா். அவா்கள், கை, கால் குறைபாடு உடையவா்கள், பாா்வையற்றோா், காது கேளாதோா், வாய் பேசாதோரும் அடங்குவா். அவா்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் இருப்பதாக அந்த அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment