எல்.ஐ.சி வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இத மொதல்ல படிங்க.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 5, 2019

எல்.ஐ.சி வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இத மொதல்ல படிங்க..

பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம் நவம்பர் மாத இறுதிக்குள் சில பாலிசிகளை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஜீவன் ஆனந்த், ஜீவன் உமாங், ஜீவன் லட்சயா, ஜீவன் லாப் உள்ளிட்ட 24 தனிநபர் பாலிசிகளும், இதே 8 குரூப் பாலிசிகளும் நிறுத்த உள்ளதாகவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.


இந்த திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் காப்பீட்டு கட்டுப்பாட்டாளரின் திருத்தப்பட்ட வழி காட்டுதல்களுடன், அடுத்த சில மாதங்களில் அவற்றை புதுபிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவ்வாறு புதிப்பிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வெளியிடப்படும் பாலிசிகள், குறைந்த அளவு போனஸ் விகிதங்களையும், அதிகளவிலான பிரீமியங்களையும் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இத்தொழில்துறை வட்டாரங்களின் அறிக்கையின் படி, 75 - 80 சதவிகித லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மாற்றம் பெரும் என்றும் கூறப்படுகிறது,. அதிலும் இந்த அதிரடியான மாற்றம் இந்த மாதம் இறுதிக்குள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எல்.ஐ.சி இந்த திட்டங்களை மாற்றும் செய்யும் முன்பே வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை வாங்கி பயன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.


இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சந்தையில் நாங்கள் எந்தவித இடையூறும் பெறவில்லை.

 காப்பீட்டாளர்கள் தற்போது 75 - 80 பாலிசிகள் இணக்கமாக இல்லாத நிலையில் நவம்பர் 30க்குள் அவை இணக்கமாக இல்லாததால் அவை திரும்ப பெற்றிருக்கலாம். இருப்பினும் கணிசமான தயாரிப்புகள் இணக்கமாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.

இதுவே எல்.ஐ.சி யின் மூத்த அதிகாரிகள் தரப்பில், தற்போது மாற்றம் செய்யப்பட்ட பாலிசிகளை தவிர மற்ற பாலிசிகள் மாற்றத்திற்கு பிப்ரவரி வரை நீட்டிப்பு செய்துள்ளது.
 மேலும் அவர் எங்களது டெர்ம் திட்டங்கள் மற்றும் வருடாந்திர திட்டங்கள் ஏற்கனவே இணக்கமாக உள்ளன.


இருப்பினும் சுமார் 24 தனிப்பட்ட திட்டங்கள், எட்டு குழு தயாரிப்புகள் மற்றும் ஏழு முதல் எட்டு ரைடர்ஸ் ஆகியவை மூடப்பட்டு பின்னர் திருத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாற்றங்களை மாற்றியமைக்க புதிய கொள்கைகள் மற்றும் ஆவணங்களை தயாரிக்க வேண்டும்.
 மேலும் புதிய சாப்ட்வேர்களை தயாரிக்க வேண்டும். அவற்றை விற்க ஆவணங்களை தயாரிக்க வேண்டும், மேலும் முகவர்களுக்கு புதியதாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், இது மிகப்பெரிய சவால் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment