என்னது, காந்தி விபத்தில் இறந்தாரா? அதிர வைத்த பள்ளிக் கையேடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 15, 2019

என்னது, காந்தி விபத்தில் இறந்தாரா? அதிர வைத்த பள்ளிக் கையேடு

தேசத்தந்தை மகாத்மா காந்தி விபத்தில் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒடிசா மாநில பள்ளிக் கையேடு ஒன்று கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


ஒடிசா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்காக 'ஆமாம் பாபுஜி' என்ற பெயரில் ஒர் இரண்டு பக்க கையேட்டை வழங்கி இருக்கிறது.

அந்தக் கையேட்டில்தான் காந்தி இறப்பு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மகாத்மா காந்தி ஒரு விபத்தில் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் காந்தி ஜனவரி மாதம் 30 தேதி, தில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் இறந்ததாக அந்த கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதன் விளைவால் காந்தி இறந்தார் என்பதே வரலாற்று உண்மைஆனால் அதற்கு மாறாக காந்தி விபத்தில் இறந்தார் எனக் கூறியுள்ள இந்தக் கையேட்டின் காரணமாக இப்போது கடுமையாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நரசிங்ஹ மிஸ்ரா, 'இது ஒரு மன்னிக்க முடியாத தவறு இதற்கு முதல்வரே பொறுப்பு. எனவே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மன்னிப்புக் கேட்க வேண்டும்


. மாநில அரசு காந்தி வெறுப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது. உடனடியாக இந்தக் கையேட்டை திரும்ப பெற வேண்டும். அத்துடன் திருத்தப்பட்ட கையேடானது மாணவர்கள் மத்தியில் மறுபகிர்வு செய்யப்பட வேண்டும் ' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment