ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 28, 2019

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை

:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. இதன்படி, மார்ச், 30 முதல், ஏப்ரல், 17 வரை தேர்வு நடக்க உள்ளது.


மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தாலும், தேர்வை நடத்துவதில், தமிழக பள்ளி கல்வித்துறை உறுதியாக உள்ளது. இதை, நேற்று முன்தினம் செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்நிலையில், தேர்வுக் கான கால அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி நேற்று வெளியிட்டார். ஐந்தாம் வகுப்புக்கு, ஏப்ரல், 15; எட்டாம் வகுப்புக்கு, மார்ச், 30ல் தேர்வு துவங்க உள்ளது. காலை, 10:00 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். வினாத்தாளை படித்து பார்த்தல், விடைத்தாளில் சுய விபரங்களை எழுதுதல் போன்றவற்றுக்கு, 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்

. அதன்பின், இரண்டு மணி நேரத்தில் விடைகளை எழுத வேண்டும் என, தேர்வு கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளது


5ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

15.04.2020 - புதன்கிழமை - தமிழ்

17.04.2020 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம்

20.04.2020 - திங்கட்கிழமை - கணிதம்


8ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

30.03.2020 - திங்கட்கிழமை - தமிழ்

02.04.2020 - வியாழக்கிழமை - ஆங்கிலம்

08.04.2020 - புதன்கிழமை  - கணிதம்


15.04.2020  - புதன்கிழமை  - அறிவியல்


17.04.2020 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்

.முப்பருவ பாடமா; 3ம் பருவ பாடமா?

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு, ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கம் முதல் இறுதி வரை நடத்தப்பட்ட, அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.

 ஆனால், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வில், ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகளை கேட்க முடியாது. ஏனெனில், 2011ல் அமலான சமச்சீர் கல்வி திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாடத்திட்டம் உள்ளது


. முதல் பருவ மான காலாண்டு தேர்வு முடிந்த பின், அந்த பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படாது. இரண்டாம் பருவத்துக்கு தனியாக புத்தகம் வழங்கி பாடம் நடத்தப்படும். அந்த பாடங்களுக்கு, இரண்டாம் பருவமான, அரையாண்டு தேர்வு நடக்கும்.

அதன்பின், ஆண்டு இறுதி தேர்வான மூன்றாம் பருவத்தேர்வு நடக்கிறது. இதில், மூன்றாம் பருவ பாட புத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் இடம் பெறும். மூன்று பருவங்களாக பாடங்கள் பிரிக்கப்பட்டதால், ஒவ்வொரு பருவத்திலும், அதிகமான பாடங்கள் வைக்கப் பட்டு உள்ளன.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள


, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு, மூன்று பருவ தேர்வுக்கான பாடங்களில் இருந்தும் கேள்விகள் இடம் பெறுமா அல்லது மூன்றாம் பருவ பாடங்களில் இருந்து மட்டும் கேள்விகள் இடம் பெறுமா என்ற விளக்கத்தை, தமிழக அரசு அறிவிக்கவில்லை. மூன்று பருவ பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்றால், மாணவர்களிடம் தற்போது இல்லாத, முதல் பருவ பாட புத்தகத்தை, தமிழக அரசு மீண்டும் வழங்க வேண்டும்.

 மீண்டும் ஒரு முறை முதல் பருவ பாடங்களை நடத்தி, மாணவர்களுக்கு அந்த பாடங்களை ஞாபகப்படுத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது

No comments:

Post a Comment