ஜூன் 1-இல் அமலாகிறது 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 3, 2019

ஜூன் 1-இல் அமலாகிறது 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்'

நாடு முழுவதும் ஜூன் மாதம் முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா்.


இதுகுறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது:


நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அமல்படுத்தப்படும்.


ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளா்கள் பலனடைய முடியும். ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.


பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம் பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும் என்றாா்.

No comments:

Post a Comment