பல்கலையில் 17 தங்கப்பதக்கம் பெற்ற தமிழக பெண்மணி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 17, 2019

பல்கலையில் 17 தங்கப்பதக்கம் பெற்ற தமிழக பெண்மணி

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், 17 தங்கப்பதக்கம் பெற்று, நாமக்கல் மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த, காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, லாரி ஓட்டுனர்,

 குணசேகரனின் மகள் ஆனந்தி, 25.அவர், பிளஸ் 2 முடித்ததும், 2012ல், அதே பகுதியைச் சேர்ந்த, அரசு போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளர், ரமேஷ், 31, என்பவருடன் திருமணம் நடந்தது



.கடந்த, 2013ல், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மருத்துவப் படிப்பில் சேர்ந்து, 2018ல் நிறைவு செய்தார்.தற்போது, நாமக்கல் மாவட்ட ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில், கால்நடை ஆலோசகராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலையில், 2013 - -18ம் ஆண்டுகளில், படித்த அனைத்து பாடப்பிரிவுகளிலும், முதலிடம் பிடித்து, ஆனந்தி சாதனை படைத்துள்ளார்.


 அதற்காக, 17 தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், ஆனந்திக்கு, 17 தங்கப்பதக்கங்களை வழங்கினர்.



இதுகுறித்து, ஆனந்தி கூறியதாவது:


திருமணமாகி, கல்லுாரிக்கு படிக்க சென்றபோது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், 'உன்னால் தொடர்ந்து படிக்க முடியாது' என்றனர்.

அவற்றை புறந்தள்ளி, படிப்பில் சாதித்துள்ளேன். என் முயற்சிக்கு, கணவர் ரமேஷ் உள்பட பலர் ஊக்கம் அளித்தனர்


.என் பெற்றோர், தஞ்சை வந்து, என்னுடன் தங்கி, என் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர். அதனால், என் படிப்பில், எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.திருமணம், குழந்தைபேறு போன்ற எதுவும், சாதிப்பதற்கு தடை அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment