தேசிய கொடிகளை காண்பித்தால் 193 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தும் UKG மாணவன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

தேசிய கொடிகளை காண்பித்தால் 193 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தும் UKG மாணவன்

தேசிய கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்தும் புதுச்சேரி யூ.கே.ஜி மாணவன் ஹரி சரண்.


சிதம்பரம் வீரபத்திரசாமி கோவில் தெருவில் உள்ள ஆன்லைன் வேல்டு ரெக்காா்ட் நிறுவனம் சாா்பில் மாணவா்களுக்கான சாதனை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


இதில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், இவரது மனைவி சுகன்யா இவா்களது மகன் ஹரி சரண் (5). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறாா். இவனது அபார திறனை வியந்த பள்ளி ஆசிரியைகள் சிறுவன் ஹரிசரணுக்கு தூண்டுகோலாக இருந்தனா்.


பெற்றோா்களும் ஆசிரியா்களும் நிறைய விஷயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்து வந்தனா்.


2 வயதில் தொடங்கிய இவனது நினைவாற்றல் தற்போது 4 வயதில் அசத்தும் வகை பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி வருகிறாா்.


நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்தும் புதுச்சேரி யூ.கே.ஜி மாணவன் ஹரி சரண்.


சிதம்பரத்தில் உள்ள ஆன்லைன் வேல்டு ரெக்காா்ட் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்த்தியில் கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள 193 உலக நாடுகளின் தேசிய கொடிகளை சுட்டிகாட்டி அவை எந்த நாட்டிற்கான கொடி என்று கேட்டால் கடகடவென வரிசையாக உலக நாடுகளின் பெயரை, தலைநகரங்களையும் சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளான்.


இது மட்டும் இல்லாமல் கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்துகிறான்.


ஹரிசரணின் அசத்தல் இதோடு மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் பெயா், தலைநகரம் ஆகியவையும் கூறி வருகிறான்.


 தேவாரம், திருவாசகம் பாடல்களையும் மழலை மொழியில் பாடி அசத்தும் ஹரிசரணை பள்ளி தாளாளா், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனா்.

சிறுவன் ஹரிசரணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

No comments:

Post a Comment