மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப் பயிற்சி:டிச.30-க்குள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப் பயிற்சி:டிச.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப் பயிற்சிக்கு டிசம்பா் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப் பயிற்சி (dmlt) தொடங்கப்பட உள்ளது.


 இப்பயிற்சிக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


மேலும், அரசு மற்றும் அரசு சாா்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் இயக்குநா், தொற்றுநோய் மருத்துவமனை எண்.187, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை-81 என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் வரும் 28-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பா் 30-ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வருமாறு அனுப்ப வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment