50 ரூபாய்க்கு 12 மருத்துவ பரிசோதனைகள்!எங்கு தெரியுமா?! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 30, 2019

50 ரூபாய்க்கு 12 மருத்துவ பரிசோதனைகள்!எங்கு தெரியுமா?!

சென்னையில் உள்ள தீவுத்திடல் பகுதியில் நடைபெற்று வரும் கண்காட்சியில் பல துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு அந்த துறை குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.


அதிலும் குறிப்பாக இந்த கண்காட்சியில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் மருத்துவ கல்வி, தொழுநோய், காசநோய், புகையிலை தடுப்பு போன்றவற்றை பற்றி விரிவாக விளக்கம் அளிக்கின்றனர்.மேலும் அங்கு அம்மா முழு உடல் பரிசோதனை மையம் உள்ளது.


இந்த மையத்தில் உடலில் 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வெறும் 50 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதில் உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் பருமன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, எடை, உயரம், உடல் பருமன் குறியீடு, ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை அளவு, பார்வை திறன் என மொத்தம் 12 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.


இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு இதன் முடிவுகள் சில நிமிடங்களில் உடனடியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


மேலும் அந்த பரிசோதனையில் ஏதேனும் வியாதிகள் தென்பட்டால் அதற்கான உரிய மருத்துவ ஆலோசனைகளும் அளிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment