தேசிய இளைஞர் நாடாளுமன்றத்துக்கு விண்ணப்பிக்க மாணவர்களை அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற விவகாரங்கள் துறை 1996ம் ஆண்டு முதல் இளைஞர் நாடாளுமன்ற போட்டியை நடத்தி வருகிறது.
மாணவர்களிடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளர்க்கவும், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தெரிந்துகொள்ளவும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதுதொடர்பாக மாணவர்கள் அதிகம் தெரிந்துகொள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, இணையதள பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
http://nyps.mpa.gov.in/. என்ற இணையதளத்தில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு ஜனவரி 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அந்த இணையதளத்தில் போட்டி தொடர்பான கையேடு, வீடியோ, புகைப்படங்கள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிர்வாகங்கள் இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு யுஜிசி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment