சர்ச்சைக்குரிய வகையில் வினாத்தாள்: நடவடிக்கை எடுக்க முன்னாள் முதல்வர் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 27, 2019

சர்ச்சைக்குரிய வகையில் வினாத்தாள்: நடவடிக்கை எடுக்க முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட வீரர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து எம்ஏ தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால், மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜிவாஜி பல்கலைக் கழகத்தில் கடந்த புதன்கிழமை எம்ஏ 3ம் செமஸ்டருக்கான அரசியல் அறிவியல் தேர்வு நடைபெற்றது.


 அப்போது, நவீன இந்திய அரசியல் எண்ணங்கள் என்ற பாடத்திற்கான வினாத்தாளில், சில சுதந்திர போராட்ட வீரர்களை புரட்சி தீவிரவாதிகளாக சித்தரித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.


 அதில் புரட்சிகர தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து எழுது என்றும், புரட்சியாளர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள்தான், கேள்வியில் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.


 இந்த கேள்விக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு நேற்று முன்தினம் பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது.



அப்போது, ‘நாட்டின் புரட்சியாளர்கள் அனைவரும் தீவிரவாதிகளா? என்பதை பல்கலை. விளக்க வேண்டும்’ என வலியுறுத்தி, பல்கலைக் கழக துணை பதிவாளர் ராஜிவ் மிஸ்ராவிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர்


. அதில், இதற்கு காரணமான கேள்விதாளை தயாரித்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


 இதற்கு விளக்கம் அளித்து பேசிய துணை பதிவாளர் ராஜிவ் மிஸ்ரா, ‘கேள்வி தாள் தயாரித்த பேராசிரியரிடம் பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டுள்ளது. அவரிடம் இருந்து பதில் வந்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றார். 



இதற்கிடையே, நேற்று மத்திய பிரதேசத்தில் போராட்டம் நடத்திய பாஜ தேசிய துணை தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான், ‘`சுதந்திர போராட்டத்திற்காக செய்த தியாகங்களை மறந்து சுதந்திர போராட்ட வீரர்களை எப்படி தீவிரவாதிகள் என அழைக்கலாம்?. இது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபட்டவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

No comments:

Post a Comment