ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 31, 2019

ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச கட்டாய ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.23 லிருந்து ரூ.45 ஆக உயர்த்தி 95 சதவீதம் அதிகரித்துள்ளது.


அதாவது ஏர்டல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இதற்கு முன் மாதத்துக்குக் குறைந்தபட்சமாக ரூ.23 ரீசார்ஜ் செய்த நிலையில் இனிமேல் குறைந்தபட்சமாக ரூ.45 அல்லது அதற்கு மேல்தான் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


மேலும், 23 ரூபாய் திட்டத்தில் கிடைத்த அதேசலுகைகள்தான் 45 ரூபாய் திட்டத்திலும் கிடைக்கும். அதில் மாற்றம் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி ரூ.45 ரீசார்ஜ் கட்டணத்தில் எஸ்டிடி வாஸ்காலிங் நொடிக்கு 2.5 பைசாவாகவும், தேசிய அளவில் வீடியோ காலிங் கட்டணம் வினாடிக்கு 5 பைசாவாகவும் கட்டணம் வசூலிக்கப்படும்

ஒரு எம்.பி டேட்டாவுக்கு 50 பைசாவும், லோக்கல் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ஒரு ரூபாயும், தேசிய அளவில் ரூ.1.5 பைசாவும் நிர்ணயிக்கப்படும். இந்த 45 ரூபாய் திட்டத்தின் காலம் 28 நாட்கள் மட்டுமே.

இந்த திட்டம் கடந்த 29-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துவிட்டதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் 23 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் பொருந்தாது.


 அவ்வாறு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் 15 நாட்களுக்குப் பின் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment