அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை: தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 27, 2019

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை: தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.3-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது


. இந்த விடுமுறை நாட்கள், மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாகவும், அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையிலும் அமைய வேண்டும்.


ஆனால், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

எனவே, அரையாண்டு விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.

 சிறப்பு வகுப்புகள் நடப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

1 comment:

  1. Kalaimagal matric hr sec school,belukrichi,Namakkal,special class vaikiranga

    ReplyDelete