ரயில்களில் பயணம் செய்யும்போது குறைகளை தெரிவிக்க புகார் எண் அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

ரயில்களில் பயணம் செய்யும்போது குறைகளை தெரிவிக்க புகார் எண் அறிமுகம்

ரயிலில் ஏற்படும் குறைபாடுகளை ஜனவரி 1ம் தேதி முதல் 139, 182 எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது.


ரயில்களில் பயணம் செய்யும் போது ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில் ஏதேனும் பொதுவான பிரச்னைகள், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், உணவு சம்பந்தமான குறைபாடுகள், விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தனித்தனியாக உதவி மைய எண்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே தொடர்பான தகவல்களை பெற 131 என்ற எண் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் 139 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது.


பின்னர் இணையதளம் போன்ற வசதிகள் பெருகியதையடுத்து இந்த உதவி எண்ணை மக்கள் பயன்படுத்துவது குறைய தொடங்கியது. இதனால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.


 இந்நிலையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் இந்த எண் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதைப்போன்று 182 என்ற எண்ணும் செயல்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.



மேலும், இதற்கு முன்பாக கேட்டரிங் சர்வீஸ்- 1800111321, விபத்து - 1072, பொதுப்புகார் அளிக்க - 138, கண்காணிப்பு- 152210, ரயில் பெட்டி சுத்தம் இல்லாமல் இருப்பின் சுத்தம் செய்ய- 58888/ 188, எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்க-9717630982 ஆகிய எண்கள் தனிதனியாக கொடுக்கப்பட்டு இருந்தது. அது தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது.



அதற்கு பதிலாக வரும் 1ம் தேதி முதல் 139 மற்றும் 182 என்ற எண்கள் மூலம் அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment