அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 22, 2019

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிப்பு

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்த, தற்காலிக ஆசிரியர், 59 பேர் விடுவிக்கப்பட்டனர்.


தமிழகத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்க, காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


அதன்படி, சேலம் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 59 காலிப்பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.



 தற்போது, அப்பணியிடங்களுக்கு, பதவி உயர்வு, பணியிட மாறுதல் மூலம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால், அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்குரிய சம்பளத்தை, துல்லியமாக கணக்கிட்டு ஒப்படைத்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment