அரசுப் பள்ளிகளில் இந்த பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும்:அமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

அரசுப் பள்ளிகளில் இந்த பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும்:அமைச்சர்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், 'பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 'சமாக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.3,000 செலவு செய்யப்படுகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த நிதி வழங்கப்படுகிறது பெண்கள் மத்தியில் தற்காப்பு மற்றும் சுய மேம்பாட்டுக்கான வாழ்க்கைத் திறன் உள்ளிட்டவை மேம்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.


மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும், மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வருகிறது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வருடத்திற்கு இருமுறை ஒரு வார கால அளவிற்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளுக்கும் சிறுமிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.இதுதவிர, தற்காப்புக் கலைகளான ஜூடோ, டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதாகக் கூறினார்.


பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment