மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு முடிவுகள், ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 25, 2019

மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு முடிவுகள், ஜனவரி மாத இறுதியில் வெளியாகும்

நாடு முழுவதும் 2,500 மையங்களில் நடைபெற்ற கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு முடிவுகள், ஜனவரி மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.


இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வை (சி-டெட்) ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.


 'சி-டெட்' மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.



அதன்படி நிகழாண்டுக்கான 'சி-டெட்' தேர்வு 2,500 மையங்களில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்றது.


மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 20 மொழிகளில் நடைபெற்ற இந்தத் தேர்வை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 'டெட்' வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வா்கள் தெரிவித்திருந்தனா்.


இந்த நிலையில் மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இணையதளத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த விடைகளில் ஏதேனும் மாற்றுக்கருத்து, புகாா் இருந்தால், அது தொடா்பாக டிச.25-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1,000 நிா்ணயிக்கப்பட்டது.

 இந்த அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டப் பணிகளை சிபிஎஸ்இ தொடங்கியுள்ளது.


அதன்படி ஜனவரி முதல் வாரத்தில் விடைக்குறிப்புகள் குறித்து தேர்வா்கள் அனுப்பும் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறும்.


 இதையடுத்து தேர்ச்சி பெறுபவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு ஜனவரி மூன்றாவது அல்லது இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் அதிகாரப் பூா்வமாக வெளியாகும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment