நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்காதது ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, December 2, 2019

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்காதது ஏன்?

''நிர்வாக காரணங்களுக்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அறிவிக்கவில்லை,'' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.


அவர் கூறியதாவது:ஊரகப் பகுதிகளில் மட்டுமே, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களுக்காக, தேர்தல் அறிவிக்கப்படவில்லை

பின்னர், கட்டாயமாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும். வார்டு வரையறைகள் பற்றி, சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. வார்டு வரையறை சட்டம், 2017ல் பிறப்பிக்கப்பட்டது.மாநில தேர்தல் ஆணையர் தலைமையில், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், பேரூராட்சி இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநில தேர்தல் ஆணைய செயலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது


. அந்தந்த மாவட்ட கலெக்டர்களால், இதுகுறித்த முன்வடிவு தயாரிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மாநிலத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, வார்டு மறுவரையறை ஆணையமும் கருத்து கேட்டது.அதன் பின்னரே, வார்டு வரையறை பட்டியல்கள் வெளியிடப்பட்டன. புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு முன்பே, வார்டு வரையறை பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டது.எனவே, புதிய மாவட்டங்களில், பழைய வார்டுகள் அடிப்படையிலேயே தேர்தல் நடக்கும். தேர்தல் முடிந்த பின் தேவைப்பட்டால், வார்டு மறுவரையறை செய்யப்படும்.

இது குறித்து, அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016ல், இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னையால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.தற்போது, அந்த குறைகள் நீக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை குறித்து, புகார் கூறிய கட்சியின் கருத்தையும் கேட்டுத் தான் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.


சமீபத்தில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வைத்த கோரிக்கைகள், இயன்ற அளவில் பரிசீலிக்கப்படும். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் ஆலோசித்து, முடிவை அறிவிப்பர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான, இடஒதுக்கீடு விபரங்கள், விரைவில் வெளியிடப்படும்.தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment