இனி வாட்ஸ் அப் இந்த போன்களில் இயங்காது! பிப்1 முதல் நிறுவனம் அதிரடி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 27, 2020

இனி வாட்ஸ் அப் இந்த போன்களில் இயங்காது! பிப்1 முதல் நிறுவனம் அதிரடி!

உலகம் முழுவதும் பெரும்பாலானோர் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.


 புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மெஸேஜ்கள் என்று அதிகாலை குட்மார்னிங் செய்திகளில் துவங்கி நள்ளிரவு வணக்கங்கள் வரையில் உலகம் முழுவதுமே வாட்ஸ்-அப் செயலியில் இயங்கி வருகிறது எனும் அளவிற்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.


இது தவிர, உலகம் முழுவதும் உள்ளவர்களை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக ஒன்றிணைத்து வரும் மாபெரும் பணியை இந்த வாட்ஸ் அப் செயலி செய்து வருகிறது.


இந்நிலையில், வரும் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன், ஐபோன்களில் iOS 8, விண்டோஸ் மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது


.வாட்ஸ்அப் சேவையை மேம்படுத்தி நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை கொடுத்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம், பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment