10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை: காலிப்பணியிடங்கள் 6,060 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை: காலிப்பணியிடங்கள் 6,060

இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் துப்பாக்கித் தொழிற்சாலையில் (Ordnance Factory)காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகாமான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு (Apprentice)கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Central Govt Apprentice Training

காலியிடங்கள்: 6060

தகுதி: மேற்கண்ட துறையில் ஐடிஐ படிக்காதவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது

இவற்றில், ஐடிஐ படிக்காதவர்கள் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும், கணிதம், அறிவியல் பாடத்தில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்கள் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ ஆகிய இரண்டிலும் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 0 9.02.2020 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.



தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: https://www.ofb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2020

Click here to download PDF

1 comment:

  1. Correct, இந்தி பாதுகாப்புத்துறை தான்..

    ReplyDelete