₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்!

தபால் அலுவலகத்தின் புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் ₹.1000 செலுத்தி ₹.72,000 வரை சம்பாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



தபால் அலுவலகம் உங்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வங்கியை விட சிறந்த ஆதாரத்தையும் அளிக்கும் என தெரிகிறது.


இந்தத் திட்டத்தை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள, மாதத்திற்கு 1000 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். பதிலுக்கு, தபால் அலுவலகம் உங்களுக்கு ₹72,590.50 ரூபாய் திருப்பித் தரும். அதாவது 7.3% என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்.



ஒரு நாளைக்கு ரூ.33 அல்லது மாதத்திற்கு ரூ.1000 டெபாசிட் செய்தால் தபால் அலுவலகம் உங்களுக்கு ரூ .72,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைத் திருப்பித் தருவது ஒரு வரப்பிரசாதமே



இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க நாட்டின் எந்த கிளையிலும் தங்கள் கணக்கைத் திறக்கலாம். தேவைப்பட்டால், வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறக்கலாம்.


அதேவேளையில் இந்த கணக்கை 2 நபர்களாலும் இயக்க முடியும் என கூறப்படுகிறது. இது தபால் நிலையத்தின் தொடர்ச்சியான திட்டமாகும். இதில், ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.33 அல்லது ஒரு மாதத்தில் ரூ.1000 டெபாசிட் செய்யலாம்.


அவர்களது வைப்பு தொகைக்கு 7.3% வட்டி சேர்த்தால், 5 ஆண்டுகளில் உங்கள் தொகை ₹72,590.50 ரூபாயாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வாடிக்கையாளரகளின் அசல் தொகை 60,000 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


தபால் நிலையத்தின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் திட்டமிடப்பட்ட தேதியின் அடிப்படையிலேயே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். மாதத்தின் முதல் தேதியில் நீங்கள் ஒரு கணக்கைத் திறந்திருந்தால், அந்தத் தொகையை மாதத்தின் 15-ஆம் தேதி வரை டெபாசிட் செய்யலாம்.


வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்யும் பணம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு திரும்பப் அளிக்கப்படும்.

1 comment:

  1. மாதத்திற்கு 33 என்றால் ஆண்டுக்கு 12045
    மாதத்திற்கு 1000 என்றால் ஆண்டுக்கு 12000

    ReplyDelete