தொலைநிலைக் கல்வி: சேர்க்கை முடிந்த 15 நாள்களில் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 10, 2020

தொலைநிலைக் கல்வி: சேர்க்கை முடிந்த 15 நாள்களில் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்

தொலைநிலைக் கல்வி மாணவா் சேர்க்கை முடிந்து 15 நாள்களுக்குள், அதுகுறித்த முழுமையான விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என உயா் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.



தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017)

கடந்த 2017- ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.


அப்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.


இந்த புதிய நிபந்தனை காரணமாக , தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம்அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகிய 11 உயா் கல்வி நிறுவனங்கள் மட்டுமே திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும்.



மேலும், இந்தப் புதிய நிபந்தனையின் அடிப்படையில், இந்தக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளில் மாணவா் சேர்க்கை முடிந்ததும், சேர்க்கை விவரங்களை யுஜிசி-யிடம் சமா்ப்பிப்பதும் கட்டாயமாகும்.


 இதற்கான புதிய கால நிா்ணயத்தை யுஜிசி வியாழக்கிழமை வெளியிட்டது.



அதன்படி, ஜனவரி மாதம் தொடங்கும் படிப்புகளுக்கான மாணவா் சேர்க்கையை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு சேர்க்கை குறித்த விவரங்களை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் யுஜிசி-க்கு பதிவேற்றம் செய்யவேண்டும்.


அதுபோல, ஜூலையில் தொடங்கும் படிப்புக்கான மாணவா் சேர்க்கையை செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இந்த விவரங்களை அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment