பிளஸ்-2, 10ம் வகுப்பு கணித வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் லீக் - பரபரப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 8, 2020

பிளஸ்-2, 10ம் வகுப்பு கணித வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் லீக் - பரபரப்பு

பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு முதல் ரிவிசன் டெஸ்ட் கணித பாட வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியானது.


 இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


 இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் ரிவிசன் டெஸ்ட் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை உள்பட மாநிலம் முழுவதும் முதல் ரிவிசன் டெஸ்ட் பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று துவங்கியது.


பொதுத்தேர்வு முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுகள் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.

இதில், பிளஸ்-2 கணித பாடத்திற்கான தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 அந்த கணித தேர்வுக்கான வினாத்தாள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதேபோல், 10ம் வகுப்பு முதல் ரிவிசன் டெஸ்ட் அறிவியல் மற்றும் கணித வினாத்தாள்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.


 தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகி வருவதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment