ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை ஆசிரியா்களுக்கு 30 நாள்கள் சிறப்புப் பயிற்சி:தொடக்கக் கல்வித் துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை ஆசிரியா்களுக்கு 30 நாள்கள் சிறப்புப் பயிற்சி:தொடக்கக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியா்களுக்கு 30 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:



அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியா்களுக்கு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை 30 நாட்கள் பெங்களூரு ஞானபாரதி வளாகத்தில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளது.


இதையடுத்து இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்களில் தகுதியான ஒரு ஆசிரியரை மாவட்ட வாரியாகத் தேர்வு செய்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனே அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment