வங்கி ஊழியர் 2 நாட்கள், 'ஸ்டிரைக் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 27, 2020

வங்கி ஊழியர் 2 நாட்கள், 'ஸ்டிரைக்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 31 முதல் நடக்கும், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில், 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.




ஊதிய உயர்வு, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31, பிப்ரவரி, 1ம் தேதிகளில், நாடு தழுவிய அளவில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.



அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர், சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:வேலை நிறுத்தத்தை கைவிட்டால் பேச்சு நடத்துவதாக, இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்தது. ஆனால், வேலை நிறுத்தத்திற்கு முன் பேச்சு நடத்தி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண கூறினோம். 




ஆனால், இந்திய வங்கிகள் சங்கம், அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.எனவே, இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட, ஒன்பது சங்கங்கள் பங்கேற்கின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment