இரண்டு புதிய ஆஃபர்'.! 50GB டேட்டா நொடிக்கு 20MB வேகம் பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 1, 2020

இரண்டு புதிய ஆஃபர்'.! 50GB டேட்டா நொடிக்கு 20MB வேகம் பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.


இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி ரூ.299 பிராட்பேண்ட் சலுகையில் 50GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.50GB டேட்டா தீர்ந்தவுடன் டேட்டா வேகம் 1Mb-ஆக குறைக்கப்பட்டுவிடும்.


மேலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாத வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ரூ.399 சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் இதில் தினமும் 2GB டேட்டா நொடிக்கு 8Mb வேகத்தில் வழங்கப்படுகிறது.


அதை தொடர்ந்து ரூ.491 பிராட்பேண்ட் சலுகையில் 120GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் வழங்கப்படுகிறது.

முந்தைய சலுகையை போன்றே டேட்டா தீர்ந்ததும் நொடிக்கு 1Mb-ஆக குறைக்கப்படும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாதத்திற்கு வழங்கப்படுகிறது.


 அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.499 சலுகையை பயன்படுத்தலாம். இதில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment