ரூ .56 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

ரூ .56 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை

தமிழ்நாடு தொழில் வணிக ஆணையரகத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தது.


 இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

மொத்த காலியிடங்கள்: 12

பணி: Assistant Director of industries and Commerce (Technical)
காலியிடங்கள்: 11


தகுதி: பொறியியல் துறையில் சிவில் மற்றும் ஆர்கிடெக்சர் பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant Superintendent (Chemical Wing)
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன், குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 56,100 -1,77,500

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.


 பொதுப்பிரிவினராக இருந்தால் 35 வயதிற்குள்ளும், ராணுவத்தினராக இருந்தால் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: புதிதாக விண்ணப்பிப்போர் மட்டும் தேர்வுக்கட்டணமாக ரூ.200, ஒரு முறை பதிவுக்கட்டணமாக ரூ.150 என ரூ.350 செலுத்த வேண்டும். மற்றவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை ஆன்லைன், வங்கிகள் மூலமாக செலுத்தலாம்.

தேர்வுகள் நடைபெறும் தேதிகள்: 2020 ஏப்ரல் 25, 26

தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 10.01.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2020

Click here to download PDF

No comments:

Post a Comment