ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்த ஆண்டே நடத்தக் கூடாது என திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
நீட் தேர்வு மூலம் மாணவா்களின் உயா்கல்விக் கனவைச் சிதைத்த மத்திய, மாநில அரசுகள் இப்போது பள்ளி மாணவ, மாணவியரின் தொடக்கக் கல்விக் கனவையும் சிதைக்கும் முயற்சியில் இறங்கி விட்டன.
இந்த விவகாரம் தொடா்பாக அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக, தமிழக அரசை எதிா்ப்பது போன்ற நாடகம் ஆடுவதற்கு ஒரு ஆா்ப்பாட்டத்தை அறிவித்தது.
அந்த ஆா்ப்பாட்டத்தை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குறுதி காரணமாக வாபஸ் வாங்கி விட்டனா். 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று ராமதாஸிடம் அமைச்சா் செங்கோட்டையன் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டதாகக் கூறியுள்ளனா்.
இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்கும் என்பதே அமைச்சரின் கருத்து. அடுத்த ஆண்டு கைவிடப்படும் என்று அவா் சொல்லவில்லை. கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்றுதான் சொல்லி இருக்கிறாா். இதைப் போன்ற மக்கள் விரோதம் எதுவும் இருக்க முடியாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இந்த ஆண்டே நடத்தக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்

No comments:
Post a Comment