70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி ''வேலைவாய்ப்பை உருவாக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி உட்பட பலர் கூறியுள்ளனர். மேலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (23ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில், ''TIDCO-வும் DLF நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை தரமணியில் 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.5000 கோடி முதலீட்டில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான நவீன வளாகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment