அரசு தொழில்நுட்பக்கல்வி ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு சம்பளம் : அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

அரசு தொழில்நுட்பக்கல்வி ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு சம்பளம் : அரசாணை வெளியீடு

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:


 அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் அறிவுறுத்தலை ஏற்று, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி தமிழகம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பெறும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.


நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு தொடக்க ஊதியம் 57,700, பதவி உயர்வு மூலம் மூத்த உதவிப்பேராசிரியராக நியமிக்கப்படுபவர்களுக்கு 68,900, கிரேடு உதவி பேராசிரியர்களுக்கு 79,800 நிர்ணயிக்கப்படுகிறது.


இணை பேராசிரியர்களுக்கு 1,31,400, பேராசிரியர்களுக்கு 1,44,200, மூத்த பேராசிரியர்களுக்கு 1,82,200, கல்லூரி முதல்வர்/இயக்குனருக்கு 1,44,200 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




உதவி பேராசிரியர்கள் வாரத்துக்கு 16 மணி நேரமும், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரமும் பணிபுரிய வேண்டும். 7வது ஊதிய குழுவின் பரிந்துரை 1.1.2016 தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.அதற்கான பணப்படிகள் 1.10.2017 தேதி முதல் வழங்கப்படும்.

No comments:

Post a Comment