நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.



2020-21 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

இந்நிலையில், நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதியதாக தாக்கல் செய்துள்ள மனுவில், 2017 -2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட, நீட் தேர்வைத் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களை ரத்து செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது. அன்று, இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment