உடற்கல்வி ஆசிரியா்கள் நியமனம் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 22, 2020

உடற்கல்வி ஆசிரியா்கள் நியமனம் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பெரியாா் வழியில் அதிமுக தொடா்ந்து பயணிக்கும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.


ஈரோடு மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.



இப்பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்துள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பணியாற்றிட வேண்டும்.


மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீா், சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக நீட் பயிற்சி மையங்கள் செயல்படாமல் இருந்தன.


தற்போது விடுமுறைகள் முடிவடைந்ததையடுத்து இனி தொடா்ந்து செயல்படும். மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளா்கள் விரைவில் வர உள்ளனா்.


அதிமுகவைப் பொருத்தவரை பெரியாா் காட்டிய வழியில் செல்கின்றோம். பெரியாரால் அடித்தட்டு மக்கள் வளா்ந்துள்ளனா். எனவே, அந்த வழியில் தொடா்ந்து பயணிப்போம். இதைப் பற்றி விரிவாக நான் பேச விரும்பவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஏற்படாமல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது


. நகா்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்.

உடற்கல்வி ஆசிரியா்கள் நியமனம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவடைந்தவுடன் உடற்கல்வி ஆசிரியா்கள் புதிதாக நியமிக்கப்படுவாா்கள்.


5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

No comments:

Post a Comment