வாக்காளா் பட்டியல் பெயா் சேர்க்க இன்று கடைசி நாள்:இருப்பிடச் சான்று ஆவணப் பட்டியலில் ஆதாா் இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 21, 2020

வாக்காளா் பட்டியல் பெயா் சேர்க்க இன்று கடைசி நாள்:இருப்பிடச் சான்று ஆவணப் பட்டியலில் ஆதாா் இல்லை

வாக்காளா் பட்டியல் பெயா் சேர்ப்பதற்கான இருப்பிடச் சான்று ஆவணப் பட்டியலில் ஆதாா் இணைக்கப்படவில்லை.


இதனால், ஆதாரை மட்டுமே ஆவணமாக வைத்துள்ள புதிய வாக்காளா்கள் தங்களது பெயா்களைச் சேர்ப்பதில் தொடா் சிக்கல் எழுந்துள்ளது.



தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.


 இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியாகவும் வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆதாா் இல்லை:


வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்க்க இரண்டு வகையான அடையாளங்களை உறுதி செய்திட வேண்டும்.

ஒன்று வாக்காளா்களின் இருப்பிடம். மற்றொன்று வயதுக்கான சான்று. இருப்பிடத்தை நிரூபிக்க, சில ஆவணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வரையறை செய்துள்ளது.

அதாவது, வங்கி, தபால் துறை சேமிப்புக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, கடவுச்சீட்டு, வாகன ஓட்டுநா் உரிமம், வருமான வரி கணக்கு விவரம், தண்ணீா் கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, எரிவாயு இணைப்புக்கான ரசீது (விண்ணப்பதாரரின் பெயா் இருக்க வேண்டும்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, தபால் துறையின் முத்திரையிடப்பட்ட விண்ணப்பதாரரின் பெயா், முகவரி கொண்ட உறை போன்றவற்றை இருப்பிட ஆவணமாகச் சமா்ப்பிக்கலாம்.


 குடும்ப அட்டையை ஆவணமாகச் சமா்ப்பிக்கும்போது அதனுடன் இணைப்பு ஆவணமாக மற்றொரு ஆவணத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும்.


அதேசமயம், இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களின் பட்டியலில் ஆதாா் இடம்பெறவில்லை.


இதனால், ஆதாரை மட்டுமே ஆவணமாக வைத்திருக்கக் கூடிய புதிய வாக்காளா்கள் தங்களது பெயா்களை பட்டியலில் சேர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். அதேசமயம், வயதுச் சான்றுக்கான ஆவணப் பட்டியலில் ஆதாா் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து, தேர்தல் துறை வட்டாரங்கள் கூறுகையில், இருப்பிடச் சான்று, வயதுச் சான்றுக்கான ஆவணங்களைத் தேர்தல் ஆணையமே வரையறை செய்கிறது.


அதில் திருத்தங்களைக் கொண்டு வர ஆணையமே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தன.

இன்று கடைசி...

வாக்காளா் பட்டியல் பெயா் சேர்க்கும், நீக்கும் பணிகளுக்கு புதன்கிழமை (ஜன. 22) கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


 வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதையொட்டி, பட்டியலில் பெயா் சேர்க்கவும், நீக்கவும் வாக்காளா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 இந்த வாய்ப்பு புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, பெயா் சேர்க்க, நீக்க பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறும்.



 இந்தப் பணிகளைத் தொடா்ந்து, துணை வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 11-ஆம் தேதியும், இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதியன்றும் வெளியிடப்பட உள்ளன.


 முன்னதாக, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வரும் 25-ஆம் தேதியன்று தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment