உங்க வீட்ல திருடு போயிடுச்சா? ரூ. ஒரு லட்சம் இழப்பீடு இவங்க தருவாங்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 6, 2020

உங்க வீட்ல திருடு போயிடுச்சா? ரூ. ஒரு லட்சம் இழப்பீடு இவங்க தருவாங்க!

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் பயணிகள் ரயில் மூலம் பயணம் செய்யும் போது அவர்கள் வீட்டிலிருந்து எதுவும் திருடப்பட்டிருந்தால், அவர்களுக்கு ரயில்வே இழப்பீடு தொகை அளிக்கும் என கூறப்படுகிறது.


இந்திய ரயில்வேயின் சார்பு நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) நாட்டின் இரண்டாவது தனியார் ரயிலுக்கான (தேஜாஸ்) அட்டவணையை வெளியிட்டுள்ளது.


இந்த தேஜாஸ் ரயிலில் பயணிகளில் பயணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அகமதாபாத் முதல் மும்பை சென்ட்ரல் வரை இரண்டாவது தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயக்க ஏற்பாடுகள் முடிந்துவிட்டன.

இது ஜனவரி 17-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது, அதே நேரத்தில் பொது மக்களுக்கு இது ஜனவரி 19 அன்று தனது சேவையை துவங்கும்.



இந்த ரயிலில் பயணிகளின் வரவினை அதிகரிக்கும் பொருட்டு இந்த சிறப்பு வசதி வழங்கப்படுகிறது.


இந்த வசதியின் கீழ், பயணிகள் ஒரு ரயிலில் பயணம் செய்யும் போது, அந்த நேரத்தில் அவர்களது வீட்டில் ஏதேனும் திருட்டு நடந்தால், பயணிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு அளிக்கப்படும்.



 இதைப் பற்றிய மற்றொரு சிறப்பு என்னவென்றால், வீட்டிலுள்ள பொருட்களின் காப்பீட்டிற்கு நீங்கள் தனித்தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை.

 இதற்காக IRCTC லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

No comments:

Post a Comment