குடியரசு தின அணிவகுப்பில் இதுவே முதல் முறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 25, 2020

குடியரசு தின அணிவகுப்பில் இதுவே முதல் முறை

 இன்று நடைபெற்ற 71 வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பல்வேறு அம்சங்கள் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் ரபேல் போர் விமானம், ராணுவத்தின் பீஷ்மா போர் பீரங்கி உள்ளிட்டவைகள் முதல் முறையாக அணிவகுப்பில் இடம்பெற்றன





மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் ராணுவம், பல்வேறு மாநில கலாச்சாரங்கள், சமூக-பொருளாதார திட்டங்களை ஆகியவற்றை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்றன. குடியரசு தின அணிவகுப்பு துவங்குவதற்கு முன் முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இதுவரை அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன், மூவர்ணக் கொடியை ஜனாதிபதி ஏற்றினார்.






அணிவகுப்பின் 10 சிறப்பம்சங்கள் :



1. 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பல்வேறு அமைச்சர்கள், துறைகள் என மொத்தம் 22 மாதிரி வடிவங்கள் அணிவகுப்பில் காட்சிபடுத்தப்பட்டன.மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் அணிவகுப்பில் இடம்பெறவில்லை.



2. நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் வகையில் ராணுவத்தின் போர் பீரங்கியான பீஷ்மா, காலாட்படையின் போர் வாகனமான பால்வே இயந்திரத்தின் பிகேட், விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம், சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஆகியன முதல் முறையாக காட்சிபடுத்தப்பட்டது.



3. இந்திய ராணுவத்தின் சார்பில் சீருடை அணிந்த 61 குதிரைப்படை வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. உலகில் தற்போது இந்தியாவில் மட்டுமே குதிரைப்படை செயல்பாட்டில் உள்ளது. ருத்ரா, துருவ் போன்ற அதிநவீன ஹெலிகாப்டர்களும் இடம்பெற்றன.



4. இது தவிர 144 விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு, தேஜஸ் போர் விமானம், எடை குறைந்த ஹெலிகாப்டர், ஆகாஷ், அஸ்திரா போன்ற ஏவுகணைகளும் இடம்பெற்றன.



5. விமான சாகச பிரிவில் சிக் 29 ரக போர் விமானம், காற்றை துளைத்து அதிவேகமாக செல்லக் கூடிய 5 ஜாக்குவார் போர் விமானங்கள் இடம்பெற உள்ளன.



6. டிஆர்டிஓ சார்பில் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கக் கூடிய ஷக்தி ஏவுகணையும் அணிவகுப்பில் இடம்பெற்றது. எதிரிகளின் செயற்கோள்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஷக்தி.


7. இந்திய கடற்படை - அமைதி, வலிமை மற்றும் வேகம் என்ற தலைப்பில் கடற்படை சார்பில் 144 இளம் மாலுமிகள் அடங்கிய அலங்கார வாகனம் அணிவகுத்து வந்தது.


8. முதல் முறையாக ராணுவத்தில் பெண்களின் ஆற்றல் மற்றும் ஆளுமையை பறைசாற்றும் வகையில் சிஆர்பிஎப் மகளிர் பிரிவினர் பைக் சாகசம் செய்தனர். இந்த படையை வழிநடத்தி இன்ஸ்பெக்டர் சீமா நாக், ஓடும் மோட்டர் சைக்கிளில் நின்றபடி சல்யூட் செய்தார்.



9. முப்படைகளின் கூட்டாக முதல் முறையாக திரிசூல் அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து விக் போர் ஹெலிகாப்டரும் காட்சி படுத்தப்பட்டது.



10. ஸ்டார்ட் அப் இந்தியா, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்களை விளக்கும் வகையிலான ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.




No comments:

Post a Comment