ஊரக உள்ளாட்சி தேர்தலில், தபால் ஓட்டு படிவம் வந்து சேராததால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஓட்டளிக்கவில்லை.
படிவம்:
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தபால் ஓட்டு போடும் தகுதி யுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் பயிற்சி வகுப்பின் போதே, அதற்குரிய படிவம் வழங்கப்பட்டது. அதை பூர்த்தி செய்து, முகாமிலேயே அலுவலர்கள் ஒப்படைத்தனர். அதன் தொடர்ச்சியாக, விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களது வீடுகளுக்கு தபால் ஓட்டுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
ஓட்டுச்சீட்டில், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்து, அந்தந்த, பி.டி.ஓ., அலுவலகங்களில் வைக்கப்படும், ஓட்டுப்பெட்டியில், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுச் சீட்டுகளை செலுத்த வேண்டும். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபட்ட பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வந்து சேரவில்லை.
அலட்சியம்:
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை, தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் எங்களுக்கே, ஓட்டளிக்க முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. 'குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி வாய்ப்பு வரும்போது, தபால் ஓட்டுகள், வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமையும். ஆனால், தபால் ஓட்டில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளது' என்றனர்.

No comments:
Post a Comment