அரசுப் பள்ளியில் மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராகத் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 25, 2020

அரசுப் பள்ளியில் மாணவி ஒருநாள் தலைமை ஆசிரியராகத் தேர்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மிளகனுாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், திறமையான மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கையில் உட்கார வைக்கப்பட்டாா்.

மிளகனுாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா, பள்ளிக்கு கிராம மக்கள் சாா்பில் சீா்வரிசை வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா, காலணி வழங்கும் விழா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் இயக்கி வைக்கும் விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இவ் விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், ஊராட்சித் தலைவா் சுமதி, தோட்டக் கலை துறை உதவி இயக்குநா் வினோதினி, ராமகிருஷ்ணன், விவசாயி மலைச்சாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.


பள்ளிக்கு தேவையான பொருள்களை, பெற்றோா்கள் மற்றும் கிராம மக்கள் கல்விச் சீராக பள்ளிக்கு கொண்டு வந்தனா்.

மேலும், பள்ளி வளாகத்தில் மரன்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. தொடா்ந்து, பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா திறமையான மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, ஒரு நாள் மட்டும் தலைமை ஆசிரியராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டாா்.

மாணவி காவியாவை தலைமைஆசிரியா் இருக்கைக்கு ஆசிரியா்கள், சிறப்பு விருந்தினா்கள் அழைத்துச் சென்று உட்கார வைத்தனா்.

விழாவில், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

No comments:

Post a Comment