பரிசாக ஒன்று கேட்பேன்; அதை தருவீர்களா?: புத்தாண்டில் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர் மோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 2, 2020

பரிசாக ஒன்று கேட்பேன்; அதை தருவீர்களா?: புத்தாண்டில் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர் மோடி

புத்தாண்டு பரிசாக தன் ட்விட்டர் கணக்கை பின் தொடர வேண்டுமென கேட்ட நபரின் கணக்கை பின் தொடர்ந்து மகிழ்ச்சியில் பிரதமர் மோடி திளைக்க வைத்துள்ளார். 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது  நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார்.



 தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4  கோடியே 43லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 51 மில்லியனை தாண்டியது.

இதன்மூலம் 111.6 மில்லியன் லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 67.4 மில்லியன் பேர் பின்தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு பிறகு ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும்  பட்டியலில் மோடி 3-வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார்.



 இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஆண் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, ட்விட்டரில் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்சை கொண்ட பிரதமர் மோடி, 2381 பேரை ஃபாலோ செய்து வருகிறார்.


முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்களை ஃபாலோ செய்யும் பிரதமர் மோடி சில சாமானியர்களையும் ஃபாலோ செய்கிறார். அதன்படி நேற்று பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் செய்த அங்கிட் துபே என்ற இளைஞர், மதிப்பிற்குரிய பிரதமரே, நான் உங்கள் தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக நான் ஒன்று கேட்பேன்.


அதை தருவீர்களா? நீங்கள் என் ட்விட்டர் கணக்கை தயவுசெய்து பின் தொடர வேண்டும் என பதிவிட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி,  செய்துவிட்டேன். சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் பதிலால் மகிழ்ச்சியடைந்த அங்கிட், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் மோடி ட்விட்டரில் என்னை பின் தொடர்வது இந்த புத்தாண்டின் சிறந்த பரிசு. பிரதமர் மோடிக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன் என  தெரிவித்துள்ளார்.


 தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் கணக்கை பின் தொடர்ந்ததை புகைப்படமாக எடுத்த அங்கிட், தனது டுவிட்டர் கணக்கில் கவர் படமாக மாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment