கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து ரூபாய் வரிசை எண் கூறி அசத்தும் மாணவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 24, 2020

கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து ரூபாய் வரிசை எண் கூறி அசத்தும் மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன், நெசவு ெதாழிலாளி. இவரது மகள் சுருதி (11). அதே கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.



இவர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், எண்கள், நிறங்களை தெரிவித்தல் என தனித்திறமை பெற்றுள்ளார்.திருவண்ணாமலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில் தன்னுடைய சாதனை முயற்சியை வெளிப்படுத்தினார்.


 மாணவி சுருதி தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து  திருவண்ணாமலை-வேலூர் சாலையில் எவ்வித தடுமாற்றமும் இன்றி சைக்கிளை சுமார் 1 கி.மீ. தூரம் ஓட்டினார். அவருடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.


மேலும், கண்களை கட்டியபடி ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினார். வண்ணங்கள், எண்கள், எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, அதில் இடம் பெற்றுள்ள வரிசை எண்கள் ஆகியவற்றையும் கூறினார். இந்த சாதனை  நிகழ்ச்சிகளில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


இதுகுறித்து, மாணவி சுருதி கூறுகையில், `கடந்த ஓராண்டாக யோகா பயிற்சி பெற்று வருகிறேன். துணியால் கண்களை கட்டிக்கொண்டு, அதிகபட்சம் 60 கி.மீ. தூரம் வரை சைக்கிள் ஓட்டி சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அதற்காக,  இதுவரை 18 கி.மீ. வரை சைக்கிளில் சென்று பயிற்சி எடுத்திருக்கிறேன்’ என்றார்.

No comments:

Post a Comment