நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை


கூட்டுறவுச் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தற்போது 37 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: கூட்டுறவுச் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 37

பணியிடம்: நாமக்கல்

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். உடற் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.drbnamakkal.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பை படித்து பின்னர் அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ. 150 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020

No comments:

Post a Comment