மாணவர்களுக்கு முடி திருத்தம் தலைமையாசிரியருக்கு பாராட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 23, 2020

மாணவர்களுக்கு முடி திருத்தம் தலைமையாசிரியருக்கு பாராட்டு

மேல்மலையனுார் அருகே மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.





விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த மேல்நெமிலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமில்லாமல் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.




தலையில் அதிகளவில் முடி வளர்த்துள்ள மாணவர்களுக்கு பள்ளியிலேயே சிகை அலங்காரம் செய்பவரை வரவழைத்து முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு நகங்களை ஒழுங்காக வெட்டி பராமரிக்க வேண்டும் என நெயில் கட்டர்களை வழங்கியுள்ளார்.




இதை அறிந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியரை பாரட்டினர். தலைமை ஆசிரியர் செல்வம் கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினையும், 2016ல், சிறந்த பள்ளிக்கான விருதினையும், 2017ல், மாவட்ட அளவில் துாய்மை பள்ளிக்கான விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment